"சந்திரயான் 3 நாளை திட்டமிட்டபடி நிலவில் தடம்பதிக்கும்" - இஸ்ரோ அறிவிப்பு...!

"சந்திரயான் 3 நாளை திட்டமிட்டபடி நிலவில் தடம்பதிக்கும்"  - இஸ்ரோ அறிவிப்பு...!

சந்திரயான் 3 லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில், கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.

நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், சந்திரயான் 2 ஆர்பிட்டருடன் வெற்றிகரமாக தகவல் தொடர்பை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து நிலவில் லேண்டர் தரையிறங்கும் பணி சற்று தாமதமடையும் என கூறப்பட்டது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும், திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. 

கடந்த 19ம் தேதி நிலவில் இருந்து 70 கிலோ மீட்டர் உயரத்தில் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்குவதற்கான அனைத்து கருவிகளும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், லேண்டர் தரையிரங்கும் நேரலைக் காட்சிகள் நாளை மாலை 5.20 மணி முதல், தனது வலைதளப் பக்கங்களில் ஒளிபரப்பப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  | உலக கோப்பை செஸ் போட்டி ; முதல் சுற்று ட்ராவில் முடிந்தது...!