நிலவின் 4-ம் வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 ...!

நிலவின் 4-ம் வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 ...!

நிலவின் 4ம் வட்ட சுற்றுப்பாதையின் உயரத்தை குறைக்கும் பணியை சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில், ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

Image

இந்நிலையில் அதிகபட்சமாக 163 கிலோமீட்டர் குறைந்தபட்சமாக 153 கிலோமீட்டர் என்ற நீள்வட்டப்பாதையில் சுற்றிவருவதாகவும், நிலவுக்கு மிக அருகில் விண்கலம் பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நாளை விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டு, வரும் 23ம் தேதி நிலவில் தரையிறங்கவுள்ளது.

இதையும் படிக்க   |  ஐஐடி மாணவர்கள் விவகாரம்: அறிக்கையை சமர்ப்பித்தது திலகவதி தலைமையிலான குழு..!