நகராட்சித் தலைவர் பெயரில் போலி வங்கிக் கணக்கு...அதிர்ச்சியில் திமுகவினர்!

நகராட்சித் தலைவர் பெயரில் போலி வங்கிக் கணக்கு...அதிர்ச்சியில் திமுகவினர்!

இராமநாதபுரம் நகராட்சித் தலைவர் பெயரில் போலி வங்கிக் கணக்கு, பணம் பறிக்க முயன்ற மர்ம கும்பலால் பரபரப்பு.

ராமநாதபுரம் நகர்மன்ற தலைவராக திமுக  ராமநாதபுரம் வடக்கு  நகர செயலாளர் கார்மேகம் உள்ளார். இவரது புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்கப்பட்டு, நகர்மன்ற தலைவர் கார்மேகத்திற்கு  உடல் நலம் குறைவாக உள்ளதாகவும் மருத்துவச் செலவிற்கு நிதி தேவைப்படுவதாகவும் சமூக வலைதளங்களில்  பதிவிட்டுள்ளனர். மேலும் இராமநாதபுரம்  மாவட்டத்தை சேர்ந்த வெளிநாட்டில் உள்ள சிலரிடம் தங்களிடம் கூகுள் பே,  ஜி பே போன்ற கணக்கு இருந்தால் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நகர்மன்றத் தலைவரின் நெருங்கிய நண்பர்கள் நேரடியாக அவரிடம் தொலைபேசியில் கேட்டுள்ளனர்.  நான் ஆரோக்கியமாக தான் உள்ளேன் யாரிடமும் பணம் கேட்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் சமூக வலைதளத்தில் எனது பெயரில்  உள்ள முகநூலில் நகரில் நடைபெறும் நலத்திட்ட பணிகள், மக்கள் பிரச்சனைகள் குறித்த ஆய்வு பணிகள் குறித்து மட்டுமே பதிவிடப்பட்டு வருகிறது

பணம் கேட்டு பதிவிட்ட வலைதளம் தன்னுடையது  இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளார். தொடர்ந்து இது போன்ற போன் கால்கள் வந்த நிலையில் உடனடியாக காவல்துறை சைபர் கிரைம்  பிரிவில் தெரிவித்து போலி கணக்கை தடுக்குமாறு தெரிவித்துள்ளார் மேலும் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் எனது பெயரில் போலியாக கணக்குத் துவங்கி பணம் கேட்ட  நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் நகரில்  திமுக நகரச் செயலாளர் முக்கிய பொறுப்பு வைக்கும் நகராட்சித் தலைவர் பெயரில் கணக்கு துவங்கப்பட்டு வலைதளத்தில் பணம் கேட்டு உள்ளது திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

இது குறித்து திமுகவினர்  கூறுகையில் இது போன்ற போலி கணக்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம், சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை நம்பி ஏமாறாமல்  எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவித்தனர். மேலும் நகராட்சித் தலைவர் பெயரில் போலி கணக்கு துவங்கி பணம் கேட்ட சம்பவம் இராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.