முதல்வரை டேக் செய்து இளைஞர் ட்வீட் : போலீஸ் என்ன செய்தது தெரியுமா?

விலையுயர்ந்த தனது சைக்கிளை கண்டுபிடித்து தருமாறு முதல்வரை டேக் செய்து இளைஞர் ஒருவர் டிவிட் செய்ததால், திருவள்ளூர் போலீசார் அவரது சைக்கிளை கண்டுபிடித்து தந்துள்ளனர்.

திருவள்ளூரை சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர் ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், இவர் விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார். அதில் தினமும் தனது நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொள்வதைத் வாடிக்கையாக செய்து வந்த நிலையில், கடந்த மாதம் அவரது சைக்கிள் திருட்டுபோயுள்ளது. எனவே கடந்த மாதம் 29ஆம் தேதி தனது சைக்கிள் திருட்டு போனதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒருவர் தனது சைக்கிளை திருடும் வீடியோவை சிசிடிவி காட்சிகள் மூலம் பெற்ற அஜ்மல் அதனையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், முதல்வர் மு.க ஸ்டாலினை அந்த பதவியில் டேக் செய்துள்ளார். அஜ்மலின் இந்த பதிவு திருவள்ளூர் போலீசாரின் கவனத்துக்கு எட்டியது. இதையடுத்து, அந்த சைக்கிளை கண்டுபிடித்து அஜ்மலிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் சைக்கிள் திருடனை கைது அவனை சிறையில் அடைத்தனர்.