விவசாயிகளை தடுக்கும் வனத்துறையினர்...உதவுமா அரசு?

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இப்பகுதியில்இரவு நேரத்தில் காவலுக்கு  வரும்பொழுது  வனத்துறையினர் குறுக்கிட்டு இப்பகுதியில் இரவில் வரக்கூடாது என்றும் மீறி வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து திருப்பி அனுப்புவதாக கூறுகிறார்கள்.

விவசாயிகளை தடுக்கும் வனத்துறையினர்...உதவுமா அரசு?

போடியில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்  காவலுக்குச் சென்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய வனத்துறையினர்  விவசாயிகள் வேதனை

சோளப் பயிர்கள் சேதம்

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள சாமைக்களம் பகுதியில் சுமார் 200  ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் மற்றும்  நெல் விதைகள்  பயிரிடப்பட்டுள்ளது. இரவு வேலைகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து மக்காச்சோள பயிர்களையும் விதைக்காக உருவாக்கப்பட்டுள்ள நெல் களத்தையும் நாசம் செய்து வருகின்றது. தினமும் இதேபோன்று கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் வந்து விவசாய நிலங்களில் புகுந்துநாசம் செய்வதால் சுமார் 40 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் விவசாயம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

தடுக்கும் வனத்துறை

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இப்பகுதியில்இரவு நேரத்தில் காவலுக்கு  வரும்பொழுது  வனத்துறையினர் குறுக்கிட்டு இப்பகுதியில் இரவில் வரக்கூடாது என்றும் மீறி வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து திருப்பி அனுப்புவதாக கூறுகிறார்கள். இதனால் இரவுக் காவல் இல்லாத காரணத்தினால் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளதால் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் பெருமளவில் சேதமடைந்து  வருவதாகவும் இதனால் சுமார் 5 லட்சம் ரூபாய் அளவில் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளதாகவும்  வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விவசாய நிலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் இரவு காவலுக்கு அனுமதி வழங்க கோரியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாய நிலங்கள் வனப்பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும் தாங்கள் வனத்துறை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு காவலுக்கு செல்வதாகவும் இப்பகுதி விவசாயிகள் கூறினர்.

விவசாயம் மற்றும் நாட்டு மாடு வளர்ப்பு

இது பற்றி இப்பகுதி விவசாயிகள் கூறுகையில் தாங்கள் காலங்காலமாக அரண்மனை ஆட்சி காலத்தில்இருந்து தலைமுறை தலைமுறையாக முத்துக் கோம்பை, மேலப்பரவு, முந்தல், சாமைக்களம், கீழக்கோம்பை, வடக்கு மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருவதாகவும், முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் நாட்டு மாடு வளர்ப்பில் மட்டுமே தாங்கள் முக்கியத்துவம் செலுத்தி வருவதாகவும் பாரம்பரிய விவசாயமான நெல் மற்றும் மக்காச்சோளம் சோளம் கம்பு போட்டு பயிர்களை பயிரிட்டு வாழ்ந்து வருவதாகவும் கூறினர்.

தற்சமயம் வனத்துறையினரின் கட்டுப்பாடுகளால் நாட்டு மாடு மேய்ச்சலும் குறைந்து வருவதால் பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தங்கள் சார்ந்துள்ள விவசாய நிலங்களையும் காட்டுப்பன்றி பெருமளவில் சேதப்படுத்தி வருவதால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர். வனத்துறையினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உடனடியாக தங்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.