வட்ட வட்டமாக முட்டை விட்டு ... வந்தவாசி விவசாயிகள் நூதன போராட்டம் ..!

வட்ட வட்டமாக முட்டை விட்டு ...  வந்தவாசி  விவசாயிகள் நூதன போராட்டம் ..!

வந்தவாசியில் நயா பைசா பட்ஜெட் அறிவித்த தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் நூதன முறையில் சோப்பு நுரை நீர் குமிழி விட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற விவசாய குறை தீர்வு கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்த நயா பைசா பட்ஜெட்டால் விவசாயிகள் வேதனை அடைந்த நிலையில் கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் சோப்பு நுரை நீர்க்குமிழி விட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நயா பைசா பட்ஜெட் அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டானது  விவசாயிகளுக்கு வெறும் நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்போது நடைபெற்று வரும் வேளாண்மை பட்ஜெட்டால் விவசாயிகள் தற்கொலை முடிவுக்குச்  செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறினர். 

இதையும் படிக்க:.. கூலி உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்... !

இதை கண்டிக்கும் விதமாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் 'தமிழக அரசு அறிவித்த இந்த பட்ஜெட்டால் காற்றில் பறக்கும் நீர்க்குமிழி போலதான் நயா பைசா பட்ஜெட் அறிவித்துள்ளது.' என்று விவசாயிகள் காற்றில் பறக்கும் நீர்க்குமிழிகள் ஊதி பறக்கவிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நயா பைசா பட்ஜெட்டை அறிவித்த தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அரசு அறிவித்த இந்த நயா பைசா பட்ஜெட்டானது காற்றில் பறக்கும் நேர் குமிழி போன்றது என்பதை வலியுறுத்த  இது போன்ற நூதனப் போராட்டம்  நடத்துவதாகக் கூறினர்.


இதையும் படிக்க:.. ஆதிதிராவிடர் மற்றும் பழங்கூடியினர் கூட்டத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் பேச்சு!!!