என்னய யாரு சுயமா செயல்பட விட்டது? எடப்பாடியார் மீதான கோபத்தில் பதவி ஏற்புக்கே வராத வைத்திலிங்கம்!!

என்னய யாரு சுயமா செயல்பட விட்டது?  எடப்பாடியார் மீதான கோபத்தில் பதவி ஏற்புக்கே வராத வைத்திலிங்கம்!!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மீதான கோபத்தில், அதிமுக எம்எல்ஏ ஒருவர் பதவி ஏற்பையே புறக்கணித்த சம்பவம் பெரும் அதிர்வலையை கிளப்பி வருகிறது. 

தலைமை செயலகத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டபோது, கொரோனா தொற்று பாதித்ததன் காரணமாக அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் மற்றும் திமுகவை சேர்ந்த 4 பேர் பதவி ஏற்க முடியாமல் போனதாக தகவல் வெளிவந்தது. . அவர்கள் நேற்று பதவி ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு திமுக எம்எல்ஏ மட்டும் பதவி ஏற்கவில்லை. இந்தநிலையில் கடந்த 9ம் தேதி நடந்த பதவி ஏற்பின் போது அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம் பதவியேற்காமல் போனதற்கான உண்மை காரணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்ததை தொடர்ந்து, எதிர்கட்சியாக உருவெடுத்த அதிமுகவில் எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்யும் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம்எல்ஏ வைத்திலிங்கத்திடம் எடப்பாடியார் சற்று கடினமாக பேசியதாகவே தெரிகிறது. அவர், ‘கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் நீங்க இருக்கிறீங்க.. ஆனா உங்க டெல்டா மண்டலத்துல 4 பேர் மட்டுமே வெற்றிப்பெற்றிருக்கிறது. எங்க மண்டலத்த நாங்க அப்படியா வச்சிருக்கோம்.. நீங்க கட்சிக்கு உண்மையா உழைச்சிருந்தா நம்ம தான் ஆட்சியமைத்திருப்போம்' என்று பேசியுள்ளாராம்.

 இதில் கடுப்படைந்த வைத்திலிங்கம்,’டெல்டா மண்டலத்துல என்னைய யாரு சுயமா செயல்பட விட்டா? தங்கமணியும் வேலுமணியும் தேவையில்லாம உள்ள புகுந்து கட்சிக்குள்ள குழப்பம் பண்ணாங்க. அதுக்கு நான் என்ன செய்யமுடியும்’ என்று ஆவேசமாக பேசிவிட்டு சென்றுவிட்டாராம். 

இந்த வருத்தத்தில் தான் எம்எல்ஏ-வாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாராம் வைத்திலிங்கம்..