வைரமுத்து மீது குழந்தை உரிமைகள் ஆணையத்தில் புகார்,. இதற்காகவே காத்திருந்தது போல வெகுண்ட சின்மயி.! 

வைரமுத்து மீது குழந்தை உரிமைகள் ஆணையத்தில் புகார்,. இதற்காகவே காத்திருந்தது போல வெகுண்ட சின்மயி.! 

பள்ளி வயது பெண்கள் வயதான ஆண்களை காதலிப்பது போல ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதையும், அந்த பாடலில் இருக்கும் வரிகளுக்காகவும் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து. 

100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்கள் ஆகியோரை வைத்து வைரமுத்துவின் 100 பாடல்கள் 'நாட்படு தேறல்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் முதல் பாடல் ஏப்ரல் 18-ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியின் இசையருவி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு பாடல் வீதம் 'நாட்படு தேறல்' என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு என் காதலா காதல் வயது பார்க்குமா என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில் ஒரு சில இடத்தில் 'வயதால் நம் வாழ்வு முறியுமா வாய்முத்தம் வயது அறியுமா' என்ற வரிதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த பாடலில் சிறுமியாக வரும் அனிகா தன் தந்தை வயதுள்ள ஒருவரின் மேல் காதல் கொள்வது போலவும், அவர் பின்னால் அலைவது போலவும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். மேலும் அந்தக் காட்சியில் வரும் பாடல்
வரிகளில் 'வயதால் நம் வாழ்வு முறியுமா வாய்முத்தம் வயது அறியுமா' என்ற வரிகளை அந்த சிறுமி கூறுவது போல இருக்கும். மேலும்  "என்வாழ்வில் தந்தை இல்லையே! தந்தைபோல் கணவன் வேண்டுமே!" என்ற வரிகளும் இருக்கும். இதை குறிப்பிட்டு வைரமுத்து சிறுமிகளை தவறாக வழிநடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் வைரமுத்துவின் மேல் பாலியல் குற்றச்சாட்டு கூறிய சின்மயி  "வைரமுத்து ஒரு பாடலுடன் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது, இது ஒரு பள்ளி பெண் ஒரு நடுத்தர வயது ஆணுடன் காதலிப்பதைப் பற்றி பேசுகிறது. இந்த பாடல் காதலிப்பதைப் சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது. பாலியல் சீர்ப்படுத்தல் என்ற கருத்து இந்த நாட்டில் காது கேளாத ஆண்டுகளில் விழுகிறது, இதை மகிமைப்படுத்தும் ஒன்று இங்கேஇருக்கிறது, அது ‘என்வாழ்வில் தந்தை இல்லையே! தந்தைபோல் கணவன் வேண்டுமே’ இதை வைரமுத்து சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில்  இந்த பாடலை கலைஞர் டிவியில் ஒளிபரப்ப கூடாது என்று பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்த பாடல் தொடர்பாக  வைரமுத்து மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.