சிறுமியின் பாலியல் வழக்கில் டியூசன் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!

சிறுமியின் பாலியல் வழக்கில் டியூசன் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டியூசன் ஆசிரியர் மற்றும் அவருக்கு உதவிய இளம்பெண் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த டியூசன் ஆசிரியர்:

சென்னையை சேர்ந்த டியூசன் ஆசிரியர் ஒருவர், பெண் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்ததுடன் அங்கேயே மாணவ மாணவிகளுக்கு டியூஷன் சொல்லி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் பெண்ணின் உதவியுடன் 7 வது படிக்கும் சிறுமியை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது. இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என இருவரும் மிரட்டி உள்ளனர்.

பெற்றோர் புகார்:

இது குறித்து  பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தி. நகர் போலீசார்  வழக்கு பதிவு செய்து டியூசன் ஆசிரியரும், இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பு:

இது தொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து  தரப்பு  வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,  நீதிபதி ராஜலட்சுமி இன்று தீர்ப்பளித்தார். குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் , டியூஷன் ஆசிரியருக்கும், இளம் பெண்ணுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவிட்டார்.. 

தமிழக அரசுக்கு உத்தரவி பிறப்பித்த நீதிபதி:

மேலும் இந்த வழக்கு தீர்ப்பில், டியூஷன் வாத்தியாருக்கு 60 ஆயிரம் ரூபாயும், இளம் பெண்ணுக்கு 70 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.