டாஸ்மாக்கில் போலீசை அனுப்ப முடியும்,. கோவில்களில் அதை செய்யமுடியாது,.! கோவில் திறப்பு பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில்.! 

டாஸ்மாக்கில் போலீசை அனுப்ப முடியும்,. கோவில்களில் அதை செய்யமுடியாது,.! கோவில் திறப்பு பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில்.! 

டாஸ்மாக்கில் காவல்துறையினரை வைத்து மக்களை ஒழுங்குபடுத்த முடியும், ஆனால் திருக்கோவில்களில் காவல்துறையை உள்ளே அனுப்புவது நன்றாக இருக்காது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சீதா கிங்ஸ்டன் என்ற தனியார் பள்ளியை அரசுடமையாக்குவது குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்திய இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பேசும் போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து தனியார் அறக்கட்டளை ஒன்று பள்ளியை நடத்தி வருவதாகவும், தற்போது அவர்களுடைய குத்தகை காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் அந்த அறக்கட்டளை சார்பாக பள்ளியை நடத்த முடியாது என்று கூறி விட்டதால் தற்போது அதனை அரசு ஏற்று நடத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அந்த பள்ளியில் பணி புரியக்கூடிய ஆசிரியர்களுக்கு அந்த அறக்கட்டளை வழங்கி வந்த ஊதியத்தை அரசும் வழங்கும் என்றும், பள்ளியில் இருக்கக்கூடிய அனைத்து குறைபாடுகளையும நீக்கி கூடிய விரைவில் பள்ளி சீர் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், மதுபான கடைகளில் காவல்துறையை வைத்து மக்களை கட்டுப்படுத்தி சமூக இடைவெளி விட்டு அவர்களை மது வாங்க அனுமதிக்க முடியும். ஆனால், திருக்கோவில்களில் அதுபோன்று காவல்துறையினரை அனுமதிப்பது நன்றாக இருக்காது என்றும் தெரிவித்தார்.