ஆன்லைன் தேர்வு என்று நம்பி பாடங்களை பாடங்களை படிக்காமல் இருந்து விட வேண்டாம்: மாணவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை...

ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், கல்லுாரி தேர்வுகள் கட்டாயம் நேரடியாகவே நடத்தப்படும் என உயர் கல்வி அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் தேர்வு என்று நம்பி பாடங்களை பாடங்களை படிக்காமல் இருந்து விட வேண்டாம்: மாணவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை...

கல்லுாரி மாணவர்களுக்கு ஜனவரி 20க்கு மேல் தேர்வுகள் நடக்க உள்ளதால், அதற்கு தயாராவதற்காகவே, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி, தேர்வுக்கான பாடங்களை முழுமையாக படித்து, சிறு தேர்வுகள் எழுதி தங்களை சோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் தற்போதைய நிலையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வி கொரோனா பரவல் தீவிரமானால் செமஸ்டர் தேர்வு தேதியை தள்ளி வைப்பது குறித்து சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

செமஸ்டர் தேர்வை பொறுத்தவரை, ஆன்லைனில் நடத்தும் முடிவை அரசு கைவிட்டு விட்டது என்றும் நேரடி முறையில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் . எனவே, ஆன்லைன் தேர்வு முறை வரும் என்று பரவும் வதந்திகளை நம்பி மாணவர்கள் பாடங்களை படிக்காமல் இருந்து விட வேண்டாம். நேரடியான தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.