சுகாதாரமற்ற உணவு…பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடும் மாணவிகள்!

சுகாதாரமற்ற உணவு…பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடும் மாணவிகள்!

கோவையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் விடுதி மாணவிகள் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்குவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரதியார் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர் மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 5000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளியூரில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இங்கே சுமார் எட்டுக்கும் மேற்பட்ட தனித்தனி தங்கும் விடுதிகள் உள்ளன. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு விடுதிக்கும் தனித்தனியே சமையல் செய்து மாணவிகளுக்கு பரிமாறப்பட்டு வந்தது.

சுகாதாரமற்ற உணவு

பின்னர் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் சமையல் செய்யது கொடுத்து வந்துள்ளனர். இதை கண்காணிக்க ஒரு வார்டன், ஒரு சூப்பர்வைசர் என நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக உணவு சுகாதாரமற்ற முறையில் புழு பூச்சிகளுடன் வழங்கப்பட்டு வந்துள்ளது.அதே போல தண்ணீர் சரிவர வினியோகம் செய்யவில்லை. இது குறித்து புகார் பெட்டியில் மாணவிகள் புகாரை கொடுத்தும் அதனை எடுத்து படிப்பதும் கூட இல்லை என்று மாணவிகள் தரப்பில்  கூறுகின்றனர்.  மாணவிகள் பல்கலைக்கழக பதிவாளர் இடம் நேரடியாக சென்று முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மாணவர்கள் போராட்டம்

இந்த நிலையில் நேற்று உணவில் மீண்டும் புழு இருந்துள்ளது. சுகாதாரமற்ற முறையில் உணவும் பரிமாறியுள்ளனர்.  கண்டித்து இன்று காலை சுமார் 9.15 மணியளவில் கையில் புகைப்பட தாள்களுடன் தட்டு பக்கட்டுடன்‌ பாரதியார் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் முன் அமர்ந்து சுமார் 100 க்கும்‌ மேற்பட்ட‌பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு நபருக்கு 3000 முதல் 4000 ஆயிரம் வரையில் விடுதி உணவு கட்டம் வசூல் செய்யப்பட்டும் சுகாதர மான் முறையில் உணவு வழங்குவதில்லை எனவும் இதை கேட்டால் விடுதியை காலி செய்து கொள்ளவும் என்று கூறிவருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு பேரூர் சரக டி.எஸ்.பி.ராஜபாண்டியன், வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை உள்ளிட்டோர் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

துணைவேந்தர் நேரில் வந்து மாணவிகள் இடத்தில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர. பல்கலைக்கழக துணைவேந்தர் இல்லாததால் போலீசார் மற்றும் இதர பேராசிரியர் மாணவிகள் தரப்பிலிருந்து 15 அம்ச கோரிக்கைகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்தால் ஒரு மணி நேரம் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தை மாணவிகள் கைவிட்டனர்.