அடேங்கப்பா.."1,588 கோடி முதலீடு" சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!!

காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

அடேங்கப்பா.."1,588 கோடி முதலீடு"  சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!!

பன்னாட்டுத் தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனம் ஆயிரத்து 588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இதன்மூலம் சாம்சங் நிறுவனத்தின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் 2022ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவு பெறும் எனவும், இந்தாண்டு இறுதிக்குள் ஆண்டொன்றுக்கு 80 லட்சம் அளவிற்கு காற்றழுத்த கருவிகள் உற்பத்தி மேற்கொள்ளவும், 2024ம் ஆண்டு இறுதிக்குள் 144 லட்சம் அளவிற்கு உற்பத்தியை பெருக்கவும் சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.