டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்யிர்கள் குறித்து முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல்...

டெல்டா மாவட்டங்களில் மழையால் எவ்வளவு நெற்யிர்கள் சேதம் அடைந்துள்ளது? என்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்யிர்கள் குறித்து முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல்...

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் மழைநீரில் மூழ்கி கிடக்கின்றன. சேதம் அடைந்த விவசாய பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், 7 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்தது.

அதன்படி அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர், டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டனர். மழைநீரில் மூழ்கிக்கிடந்த நெற்பயிர்களை பார்வையிட்டு எந்த அளவுக்கு சேதம் அடைந்துள்ளது? என்பதை வயலில் இறங்கி பார்த்தனர். பயிர் சேதங்களை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவினர், எவ்வளவு நெற்யிர்கள் சேதம் அடைந்துள்ளது? விவசாயிகளுக்கு உடனடியாக என்னென்ன நிவாரணம் தேவை? என்பது குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், இவை அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்து அறிக்கையாக தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.பெரியசாமி தலைமையிலான 7 அமைச்சர்கள் கொண்ட குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பயிர்சேத அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.