"களப்பணியில் 16,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்" ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னை தேனாம்பேட்டை பகுதிக்கு உட்பட்ட விஜயராகவா சாலையில்  மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் களப்பணிகளை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன், மற்றும் நகராட்சி துறை செயலாளர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.  

அப்போது பேசிய சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நேற்று அதிகமாக கொளத்தூரில் 15 சென்டிமீட்டர், கோடம்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர் என பல்வேறு இடங்களில் மழை அதிகமாக பதிவாகி இருந்தது, இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. மேற்கு மாம்பழம் தியாகராய நகர் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை தற்பொழுது படிப்படியாக அகற்றி வருகிறோம் என்றார். மேலும், மழைநீர் வடிகால் பணி நடைபெற்றதால் தான் மற்ற இடங்களில் மழைநீர் தேங்காாமல் இருந்ததாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் மட்டும் 16,000 மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் இரண்டு அமைச்சர்கள் நேரடியாக களப்பணியில் இரவில் இருந்து ஈடுபட்டு வருகிறார்கள். மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்லாமல் இருந்தால்தான் பிரச்சனை மழை நீர் வடிகாலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது ஆனால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.