தனியார் வங்கியின் அட்டூழியம்...லாரி உரிமையாளர்கள் புகார்! 

மாத தவனையை லாரியின் உரிமையாளர் கலியபெருமாளின் வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டு வரும் நிலையில் வங்கி நிர்வாகம் லாரியை விடுவிக்க மறுக்கிறது. 

தனியார் வங்கியின் அட்டூழியம்...லாரி உரிமையாளர்கள் புகார்! 

தவனை தொகை செலுத்தியும் லாரியை பறிமுதல் செய்து வைத்து கொண்டு அதன் உரிமையாளரிடம்  திரும்ப தர மறுக்கும் தனியார் வங்கி மீது லாரி உரிமையாளர் சங்கத்தினர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

லாரி பறிமுதல் 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். மினி லாரி உரிமையாளரான இவர் தனது லாரிக்கு புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ளார். அதற்கான தவனையை மாதமாதம் செலுத்தி வந்த நிலையில் கடந்த மே மாதம் தனது மகளின் திருமணம் காரணமாக அம்மாத தவனை செலுத்த முடியாமல் போனதாகவும் இதனால் உத்திர பிரதேச மாநிலத்திற்கு லாரி சவாரி சென்ற போது அதனை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து அங்கே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லாரி பறிமுதல் செய்த பிறகும் அதற்கு உண்டான மாத தவனையை லாரியின் உரிமையாளர் கலியபெருமாளின் வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டு வரும் நிலையில் வங்கி நிர்வாகம் லாரியை விடுவிக்க மறுக்கிறது.  

உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார்

லாரி உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கி வாயிலில் மறியல் போராட்டதில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்களை அழைத்து பேசிய நிர்வாகம் விரைவில் லாரியை உரிமையாளரிடம் ஒப்படைப்பதாக கூறிய நிலையில் இதுவரை லாரியை உரிமையாளரிடம் ஒப்படைக்கவில்லை, இது குறித்து புதுச்சேரி பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் புகார் வாங்க மறுத்து லாரி பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் புகார் அளிக்கும் படி கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது,  

இதனால் கலிய பெருமாள் இன்று புதுச்சேரி - தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினருடன்  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது தனியார் வங்கியில் கலியபெருமாளுக்கு  நடந்தவை குறித்தும் லாரியை விரைவில் மிட்டு தர கோரியும் ஆளுநரிடம் புகார் தெரிவித்ததாகவும், இது குறித்து ஆளுநர் உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் யூவராஜ் தெரிவித்துள்ளார்.