ரயில் நிலைய நடைமேடை கட்டணம் இவ்வளவா? பொதுமக்கள் அதிர்ச்சி

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் சில ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் இவ்வளவா? பொதுமக்கள் அதிர்ச்சி

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் சில ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு எதிரொலியால், மக்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்தில் கூடாமல் இருக்கும் வகையில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்திருந்தது. இதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது. 
இதேபோன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இந்த ஆண்டும் நடைமேடை கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

ரெயில் நிலையத்திற்கு, பயணம் செய்பவர்களை விட அவர்களை வழியனுப்புவதற்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இதனால் பயணம் செய்பவர்களை விட வழியனுப்ப வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.  

இதன்படி, தமிழகத்தில் சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த கட்டண உயர்வு கடந்த மார்ச் முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சில மாவட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் நேற்று உயர்த்தப்பட்டுள்ளது.  இதன்படி, கும்பகோணம், விருத்தாசலம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.