ஒரே வாரத்தில் 8 பேரை கடித்த தெரு நாய்கள்... அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அச்சம்!

ஒரே வாரத்தில் 8 பேரை கடித்த தெரு நாய்கள்... அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அச்சம்!

எம்கேபி நகர் பகுதியில் ஒரே வாரத்தில் 8 பேரை கடித்து குதறிய நாய்களால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயபுரம் பகுதியில் வெறி பிடித்த நாய் சுமார் 30 பேரை கடித்து குதறியது. இது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 

மேலும் வெறிபிடித்த நாயை அப்பகுதி மக்கள் அடித்தே கொன்றனர்.மேலும் அந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது பின்பு தெரிய வந்தது.  

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட எம் கே பி நகர் 11 வது மேற்கு குறுக்கு தெரு மற்றும் காந்தி நகர் 5வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று சுமார் ஐந்து பேரை நாய் கடித்துள்ளது.

மேலும் இந்த வாரத்தில் மட்டும் எட்டுக்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்து குதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 ஏற்கனவே இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அப்பகுதியில் வந்து மாநகராட்சி அதிகாரிகள் நாய்களைப் பிடிக்க எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.