பல்லடத்தில் மின் மயானம்…மக்கள் எதிர்ப்பு!

பல்லடத்தில் மின் மயானம்…மக்கள் எதிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பச்சாபாளையம், ராயர் பாளையம்,கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்பின் மத்தியில் நவீன மின் மயானம் அமைக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

மின் மயானம் அமைக்கும் நகராட்சி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு,ஏழு வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி நிர்வாகத்தின் மின் மயானம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொசவம்பாளையம் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டிப்பாக பல்லடம் பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்றும் ஆனால் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு யாருக்கும் இடையூறு இல்லாத பகுதியில் மின் மயான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் எதிர்ப்பு

மேலும் கடந்த மூன்று மாத காலமாக மின்மயானம் அமைக்கும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து கருப்புக்கொடி,சாலை மறியல் உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் தெரிவித்தும் அதனை கண்டு கொள்ளாமல் பல்லடம் நகராட்சி நிர்வாகம் குடியிருப்புகளுக்கு மத்தியில் மின் மயானம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதனை கண்டித்து தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.