ஷிண்டேவுக்கு வாழ்த்து சொன்ன ஓ.பி.எஸ்

ஷிண்டேவுக்கு வாழ்த்து சொன்ன ஓ.பி.எஸ்

சிவசேனா மூத்த தலைவரும் அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தலைமை தாங்கியவருமான ஏக்நாத் ஷிண்டே பாஜக துணையுடன் தற்போது முதலமைச்சராகியுள்ளார்.

மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு தமது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது

“மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கும், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.தேவேந்திர பட்னவிஸ் அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்! இவர்கள் தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்”

இவ்வாறு தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

- ஜோஸ்