"அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகளை வாங்கதால் பழைய பேருந்துகளை இயக்கவேண்டியுள்ளது" அமைச்சர் சிவசங்கர்!!

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கதால் பழைய பேருந்துகளை இயக்கும் நிலை உள்ளது சிதம்பரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய குளிரூட்டும் ஓய்வறை திறப்பு விழா, பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரருக்கு பணி ஆணை வழங்கும் விழா, மற்றும் பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா சிதம்பரம் போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.

அப்பொழுது பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "15 ஆண்டுகள் ஓடிய பழைய பேருந்துகளை நிறுத்த வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 1500 பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டி உள்ளது. அதற்காக புதிய பேருந்துகளை தற்பொழுது வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு தேவையான இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். விரைவில் அதற்கும் தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "எந்த பகுதிக்கும் பேருந்து இயக்கப்படவில்லை என தெரிவித்தால் உடனடியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படாத காரணத்தினால் பழைய பேருந்துகளை வைத்து  இயக்கும் சூழ்நிலை உள்ளது. தற்போது புதிய பேருந்துகள் வாங்க உள்ளோம். மேலும் 1500 பேருந்துகளை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 200 பேருந்துகள் பணிகள் முடிந்து வந்துள்ளது. மற்ற பேருந்துகளும் பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும். ஆகவே இந்த பிரச்சனைகள் படிப்படியாக தீர்க்கப்படும்" என கூறியுள்ளார்.

இதையும் படிக்க || விடைபெறுகின்றது 2000 ரூபாய் நோட்டுகள்!!