"திமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது", அமைச்சர் எ.வ. வேலு பேச்சு!

"திமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது", அமைச்சர் எ.வ. வேலு பேச்சு!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சா் ஏ.வ.வேலு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை முடக்கவோ, கலைக்கவோ யாராலும் முடியாது என தொிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மரக்கன்றுகள் நடும்பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில், தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் ஆகியோர் திருச்செங்கோடு மொளசி சாலையில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தனர். 

அப்போது அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது, தமிழக நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும், புதிதாக மரங்கள் நட்டு பசுமையாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கத்தின் போது மரங்கள் வெட்டப்படுவதால் ஒரு மரத்திற்கு 10 மரங்கள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க || திருச்சி அருகே தீண்டாமை கொடுமை!

மேலும், ஆளுநர் அறிக்கை விடுவதும், அதை திரும்ப பெறுவதும், அதைப் பற்றி எல்லாம் மாநில அரசு கவலைபடாமல், வளர்ச்சிப் பணிகளை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுகிறது. தமிழக அரசு வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முடக்கப்படும் என்ற வதந்தியை ஒருசிலர் பரப்பி வருகின்றனர்.

முடக்குதல், கலைத்தல் போன்ற விதியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ள தமிழகத்தில் அதனை எல்லாம் பயன்படுத்த முடியாது. தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடு ஈர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் முதன்மை மாநிலமாக உள்ளது. எனவே இங்கே இந்த ஆட்சியை யாரும் முடக்கவோ, கலைக்கவோ முடியாது. ஐந்தாண்டு காலத்திற்கு முழுமையாக ஆட்சி நிறைவு செய்வோம், என பேசியுள்ளார். 

மேலும், ஐந்தாண்டுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை 2 ஆண்டில் தமிழக முதலமைச்சர் செய்துள்ளார். தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்திவருகிறார். அடுத்ததாகவும் திமுக தான் ஆட்சியில் அமையும், எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || ஒடிசா ரயில் விபத்து: தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம்!