இரண்டு நாள் மழைக்கே தாக்கு பிடிக்காத தார் சாலை: மக்கள் அச்சத்துடன் பயணம்!

இரண்டு நாள் மழைக்கே தாக்கு பிடிக்காத தார் சாலை: மக்கள் அச்சத்துடன் பயணம்!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இரண்டு நாள் மழைக்கே தாக்கு பிடிக்காக தரமற்ற தார் சாலை உடைந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்  ஊரப்பாக்கம் அடுத்த எம்.ஜி நகர் பிராதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இந்த பகுதியில் எம்.ஜி பிரதான சாலையில் கடந்த 20நாட்களுக்கு முன்பு 36லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய தரை பாலத்துடன் கூடிய தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தார்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கடந்த இரண்டு தினங்களில் பெய்த மழையின் காரணமாக கால்வால்ய்க்கு மேல்  அமைக்கப்பட்டுள்ள தரைபாலத்தின் தார் சாலை இருபுறத்திலும் உடைந்து பள்ளம் விழுந்துள்ளது. இந்த தரை பாலத்தின் வழியாக சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினதோறும் கடந்து செல்லும். 

இதனால் பாலத்தின் மீது செல்லகூடிய வாகன ஓட்சிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரண்டு நாள் பெய்த மிதமான மழைக்கே இந்நிலை என்றால் ஓரிரு மாதங்களில் வருகிற மழைக்காலங்களில் இந்த தார்சாலையின் கதி என்னகுமோ  என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மனதில் எழும்பியுள்ளது. 

உடனடியாக மக்களின் நலன் முக்கியமென கருதி அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தரமற்ற தார் சாலையை சீரமைத்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க: வரிச்சியூர் செல்வம் கைது: நீதிமன்றத்தில் ஆஜர்!