வண்டலூர் அருகே 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் - வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

வண்டலூர் அருகே 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் - வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

வண்டலூர் அருகே 400 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் - வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னைக்கு அருகில் புதிய பேருந்து நிலையம்

சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  தொடர்ந்து கட்டுமானப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சிரமத்திற்கு உள்ளாகும் மக்கள்..  போர்க்கால அடிப்படையில் பணிகள்  - சென்னை காவல்துறை அறிவிப்பு

தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம்

இந்த பேரூந்து நிலையம் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக கட்டப்படுகிறது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியின் சுய விவரக் குறிப்பு- Dinamani

பிப்ரவரி மாதம் திறக்கப்படும் புதிய பேருந்து நிலையம்

இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்துக்கான அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. பயன்பாட்டு வசதிகள், பூச்சு வேலை, மின்சார இணைப்பு போன்ற பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில், ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.