காலை உணவுத் திட்டம் முதலமைச்சரின் கனவு!

காலை உணவுத் திட்டம் முதலமைச்சரின் கனவு!

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை  செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று மதுரை கீழ அண்ணா தோப்பில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதல்வர் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். இதுபோல் சென்னை பெருநகர  மாநகராட்சி பள்ளிகளில் முதல் கட்டமாக 37 பள்ளிகளில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் தொங்கி வைத்தனர்

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த திட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன், மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, நிலைகுழு உறுப்பினர் விஸ்வநாதன்,   சென்னை வடக்கு துணை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சுதர்சனம்மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகௌபால் மற்றும் கவுன்சிலர்கள் மாதவரம் மண்டல அதிகாரி   முருகன் பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள்  கலந்து கொண்டனர்.

சிற்றுண்டி தொடக்க விழா

மாதவரம் நகராட்சி தொடக்க பள்ளியில்  நடைபெற்ற காலை சிற்றுண்டி தொடக்க விழாவில் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, அதிமுக ஆட்சியிலேயே மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம். ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஓரிரு நாட்கள் மட்டுமே அந்த உணவு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது தான் முழுமையான பயனுள்ள காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்பட உள்ளது.

உணவு தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, அம்மா உணவகங்களுக்கும், காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கும் தொடர்பில்லை. இந்தத் திட்டத்திற்கு தனியாக உணவகங்கள் அமைக்கப்பட்டு குறித்த நேரத்தில் குறித்த பள்ளிக்கு உணவு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட உள்ளது. என பேசினார்.