'மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன் 'மிரட்டிய வழக்கறிஞர்,.. வழக்குப்பதிவு செய்ததும் தலைமறைவான சோகம்.!  

'மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன் 'மிரட்டிய வழக்கறிஞர்,.. வழக்குப்பதிவு செய்ததும் தலைமறைவான சோகம்.!  

வாகன சோதனையின் போது போக்குவரத்து காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் என இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை 
காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கும் பொருட்டு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சேத்துப்பட்டு ஸ்பார்டன் சாலை சந்திப்பில் பிரீதி ராஜன் என்ற இளம்பெண் காரில் வந்துள்ளார்.

அப்போது போக்குவரத்து காவல் துறையினர் அவரிடம் நடத்திய சோதனையில் அவர் இ-பதிவு இல்லாமல் வெளியே காரில் சுற்றுவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினர் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். அதேவேளையில் பிரீத்தி ராஜன் இது தொடர்பாக தனது தாயார் தனுஜா ராஜனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். உடனடியாக பி.எம். டபிள்யூ காரில் சம்பவ இடத்திற்கு வந்த தனுஜா ராஜன் போக்குவரத்து காவல் துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் அவதூறான வார்த்தைகளால் போக்குவரத்து காவல் துறையினரை வசைபாடினார்.இது அனைத்தையும் வீடியோ பதிவு செய்துகொண்டே காவல் துறையினர் அவரை மரியாதையுடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினர். நேற்று சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் தான் ஒரு வழக்கறிஞர் எனவும் உங்கள் சட்டையை கழற்றி விடுவேன், சாவடித்துவிடுவேன் எனவும் காவல் துறையினரை வசைபாடிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தன் மகள்  ப்ரீத்தி ராஜனுடன் உடனடியாக சென்று விடுகிறார். 

இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர் ரஞ்சித் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் தனுஜா ராஜன் மற்றும் ப்ரீத்தி ராஜன என இருவர் மீதும் 269 தொற்றுநோய் தடுப்பு சட்டம், 270 நோய் பரப்பும் நோக்கில் செயல்படுவது, 188 தடையை மீறி செயல்படுவதல், 294b ஆபாசமாக பேசுதல், 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 506 கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தாய் தனுஜா ராஜன் மற்றும் மகள் ப்ரீத்தி ராஜன் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்கள் இருவரையும் சேத்துப்பட்டு காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.