இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியை வழங்கவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு!

தமிழால் ஒருங்கிணைக்கப்பட்டவர்களை யாராலும் பிரிக்க முடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியை வழங்கவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு!

மத்திய அரசு எங்களுக்கு தர வேண்டிய நாடாள். நிதியை சரியாக வழங்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

அடிக்கல் நாட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் தமிழ் அகாராதியின் தந்தை எனப் போற்றப்படும் வீரமாமுனிவருக்கு ரூ.1 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டி, கல்வெட்டை திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிதி வழங்குவதில்லை

பின்னர் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில்,   தமிழால் ஒருங்கிணைக்கப்பட்டவர்களை யாராலும் பிரிக்க முடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நாம் மதத்தால் நம்பிக்கைகளால் வேறுபட்டவர்களாக இருக்கலாம். வேறு நாடுகளில் வாழக் கூடியவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் நாம் தமிழர், அவருக்கும் நமக்கும் தமிழ் மீது இருக்கக் கூடிய அந்த அன்பு அவர் தமிழுக்காக ஆற்றியிருக்கக் கூடிய பணிகள், இதுதான் நம்மை ஒன்றான ஒரே இனமாக கட்டி போட்டிருக்கக் கூடிய ஒன்று. இதனை மதிக்கக் கூடிய வகையில் தான் இந்த மணிமண்டபம் என்றும் பேருந்து நிலையம், பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எங்களுக்கு தர வேண்டியநிதியை சரியாக வழங்கவில்லை. நிதியை அளித்தால் விரைவில் அதனை செய்து கொடுப்பேன் என்றார்.