கலாஷேத்ரா விவகாரம்..! போராட்டக்காரர்கள் கைது..!!

கலாஷேத்ரா விவகாரம்..! போராட்டக்காரர்கள் கைது..!!

கலாஷேத்ரா விவகாரத்தில் இரண்டாவது முறையாக போராட்டம் நடத்த முற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா வளாகத்தின் முன்பு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

போராட்டத்தின் போது, நீதிபதி கண்ணன் தலைமையிலான சிறப்பு குழு உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும். எனவும்,காவல் துறை கைது செய்யப்பட்டுள்ள ஹரி பத்மனை ஜாமினில் வெளிவராமல் தடுக்க வேண்டும் என்றும் குற்றசாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். அதன் பின், போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்து மூன்று பேருந்துகளில் அடைத்து திருவான்மியூரில் உள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி போராட்டக்காரர்கள் "கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டு இவ்வளவு நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் அறிக்கை கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக இருப்பினும் கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்." எண்டு தெரிவித்தனர் 

மேலும் "இன்று விசாரணைக்கு வரும் ஹரி பத்மன் ஜாமீன் வழக்கில், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், மீதமுள்ள மூன்று குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்" எனவும் கூறினர்