திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் பெயர்... அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்டப்படுவதாக, சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய கலசப்பாக்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு முன்னதாக கலைஞர் அரசு கலைக் கல்லூரி எனப் பெயர் இருந்ததாகவும், அதனை தற்போது பின்பற்றப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். இவரது கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் ஒப்புதலோடு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு கலைஞர் அரசு கலை கல்லூரி என பெயர் சூட்டப்படுவதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து வி.சி.க. உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கூறிய கருத்துக்கு பதில் அளித்துள்ள அவர், திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகத்தில் திராவிட இயக்க கொள்கைக்கு எதிரான கருத்துகள் இருந்தது என்றும், அது தற்போது நீக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.