கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்…பத்திரிக்கையாளர் கைதா?

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்…பத்திரிக்கையாளர்  கைதா?

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி குறித்து வழக்கு சிபிசிஐடி போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

வழக்கு மன்றம் உத்தரவு

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி குறித்த செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் அந்த சமூக வலைதளம் நீக்கப்படும் என்றும், செய்தியை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சாவித்திரி கண்ணன் கைது

இந்நிலையில் கடந்த சில  தினங்களுக்கு முன்பாக அறம் என்னும் செய்தி இணையதளத்தை நடத்தி வருகின்ற மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கள்ளக்குறிச்சி மரணம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பிணையில் வெளியிட்டது குறித்தும், மாணவி எழுதியதாக வெளியிடப்பட்ட கடிதம் பொய்யானது மற்றும் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்.

போலீஸ் விசாரணை

இந்நிலையில் இன்று சாவித்திரி கண்ணன் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் சைபர் கிரைம் போலீசாரால் அழைத்துவரப்பட்டு ஒலக்கூர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்பு  விசாரணைக்கு அழைக்கும் பொழுது மீண்டும் வர வேண்டும் எனற நிபந்தனையோடு உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சிவஞான சம்மந்தம்  என்பவருடன் அனுப்பிவைக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு சம்பந்தமாக அவதூறு பரப்பியதாக பத்திரிக்கையாளர் ஒருவரை விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.