"ஜெயலலிதாவின் பொருட்கள், அவரது நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டது" லஞ்ச ஒழிப்புத்துறை பதில்!

"ஜெயலலிதாவின் பொருட்கள், அவரது நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டது" லஞ்ச ஒழிப்புத்துறை பதில்!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் எங்கே என ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு  தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளித்துள்ளது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் குறித்து ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளித்துள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், ரூபி, மரகதம், முத்துக்கள் மற்றும் பல வண்ண கற்கள் என 30 கிலோ ஆபரணங்கள் மட்டுமே கருவூலத்தில் இருப்பதாக, இந்த வழக்கின் அரசு வழக்கறிஞரான கிரண் எஸ்.ஜவாலி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அப்பொழுது, விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28  பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு, ஆர்டிஐ மூலம் கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு  ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதில் கடிதம் அளித்துள்ளது.

இதையும் படிக்க || பூஜா பட் நிலம் வாங்கியது செல்லாது...சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!