விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை உயர்வு இன்று முதல் அமல்

நெல் கொள்முதல் பருவம் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை உயர்வு இன்று முதல் அமல்

நெல் கொள்முதல் பருவம் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளிடம் இருந்து இந்திய உணவு கழகம் சார்பில் நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.  விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல்லுக்கு 100 கிலோ எடையான குவிண்டால் அடிப்படையில், மத்திய & மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகிறது.  தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பருவம் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடியும்.  2021-22 நிதியாண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவின்டாலுக்கு சன்ன ரக நெல்லுக்கு ஆயிரத்து 960 ரூபாய் எனவும், பொது ரகத்துக்கு ஆயிரத்து 940 ரூபாய் எனவும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

மாநில அரசின் ஊக்கத் தொகை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார் தமிழக அரசு நடப்பு ஆண்டில் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு சன்ன ரகத்துக்கு 70 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், பொது ரகத்துக்கு 50-லிருந்து 75 ரூபாயாகவும் ஊக்கத் தொகையை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த விலையில் இன்று முதல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை உயர்வும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.