பசிக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள்.!! சாலையோர மக்களுக்கு இலவச உணவு கொடுக்கும் காவல்துறையினர்.! 

பசிக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள்.!! சாலையோர மக்களுக்கு இலவச உணவு கொடுக்கும் காவல்துறையினர்.! 

கடையநல்லூரில் பசியில்லாத நகரை உருவாக்கும் வகையில் பசிக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள் காவல்துறையின் இலவச உணவு வழங்கும் சேவை எஸ்.பி. துவக்கி வைத்தார்.  திட்டத்திற்கு பொதுமக்கள்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் சேவையை  தன்னார்வலர்கள் பலர் செய்து வருகின்றனர். ஆனாலும் அனைவருக்கும் உணவு சேரவில்லை என்ற நிலை இருக்கிறது. 

இந்நிலையில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் விதமாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல்துறையினர் மற்றும் வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர்  இணைந்து கடையநல்லூரை பசியில்லாத நகரமாக உருவாக்கும் வகையில் பசிக்கிறதா எடுத்துக்கொள்ளுங்கள் என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளனர். கடையநல்லூர் மெயின் ரோடு மணிக்கூண்டு அருகே இதற்கென செட் அமைக்கப்பட்டுள்ளது. இதை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுகுணசிங்  துவங்கி வைத்தார். அப்போது அங்கு  பசியோடு காத்திருந்தவர்கள் தாங்களாகவே வந்து தங்களுக்கு தேவையான உணவை எடுத்துக்கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடையநல்லூர் காவல் துறையினரின்  மக்களின் பசியை போக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது.  இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் பேட்டியின்போது கூறினார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன் களப் பணியாளர்களான காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் முககவசம் மற்றும் சனிடைசர்களை வழங்கி, பணியின் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை  பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.