ஞாயிற்றுக் கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழிந்து நிரம்பி காணப்பட்டது பழனி தண்டாயுதப்பாணி கோவில்!!

ஞாயிற்றுக் கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழிந்து நிரம்பி காணப்பட்டது பழனி தண்டாயுதப்பாணி கோவில்!!

பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ரோப்கார் சேவை பராமரிப்பு பணிக்காக நிறுத்தபட்டதால் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை கோவில் நடை திறக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு  பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதி முழுவதும் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக் காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன்  செலுத்தினர்.ரோப்கார் சேவை பராமரிப்பு பணிக்காக 45 நாட்களுக்கு நிறுத்தபட்டுள்ளதால் பக்தர்கள் படிப்பாதை, மின்இழுவை ரயில்,ஆகியவை மூலம் மலைக்கோவில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் மொட்டையடிக்கும் இடங்களான சரவன பொய்கை ,ஒருங்கிணைந்த முடி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இன்று  ஞாயிற்று கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.