மயிலாடுதுறையில் தடையை மீறி மீன்பிடிக்கக் கூடாது...! ஆட்சியர் அறிவுறுத்தல்....!

மயிலாடுதுறையில் தடையை மீறி மீன்பிடிக்கக் கூடாது...! ஆட்சியர் அறிவுறுத்தல்....!

மீன்பிடி தடைக் காலத்தின் போது மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்  செல்வதை தவிர்க்க வேண்டுமென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தியுள்ளார். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.  
அந்த வகையில், நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஏப்ரல் மாதம் 15ம்தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 தமிழ்நாட்டில் கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைசட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020ன்படி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ந் தேதி முதல் ஜீன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைபடகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க:... சீட்டைக் காண்பித்து சீட்டிங் செய்த அண்ணாமலை...!!

அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் வருகின்ற 15ம்தேதியிலிருந்து துவங்க உள்ளதால் கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி,  சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, பூம்பகார், பழையார், கொடியம்பாளையம் வரை உள்ள 28 மீனவ கிராமங்கள் வருகின்ற 15ம்தேதி முதல் ஜுன் மாதம் 14ம்தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்ககூடாது என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிக்க:....வருமானத்துக்கு அதிகமாக சொத்து - உதவி காவல் ஆணையர் குற்றவாளி - நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு