மாயமான மீனவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது!

மாயமான மீனவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது!

திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த அஸ்வின், பிரசாத், பால்ராஜ், நித்தியானந்தம் ஆகிய 4 மீனவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவு அஸ்வின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி பணி முடிந்து கரைக்கு திரும்பியபோது காற்றின் வேகம் காரணமாக படகு கடலில் கவிழ்ந்தில் அஸ்வின் மற்றும் பிரசாத் ஆகியோர் மாயமாகினர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பால்ராஜ், நித்தியானந்தத்தை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மாயமான மீனவர்கள் அஸ்வின், பிரசாத் ஆகியோரை மீட்கக் கோரி அமலி நகர் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐசிஜி கப்பல் மற்றும் சிறிய ரக விமான மூலம் மீனவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக நீடிக்கிறது.

மீனவர்கள் இதுவரை மீட்கப்படாததை அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராம மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகளும், சுமார் 2 ஆயிரம் விசைப் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.