பாபா ராம்தேவுக்கு ரு.1,000 கோடி அபராதம்.. ஆப்பு வைத்த இந்திய மருத்துவ கவுன்சில்!!

பாபா ராம்தேவுக்கு ரு.1,000 கோடி அபராதம்.. ஆப்பு வைத்த இந்திய மருத்துவ கவுன்சில்!!

இந்திய மருத்துவ கூட்டமைப்பு, ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பதஞ்சலி நிறுவனரும் சாமியாருமான யோகா குரு பாபா ராம்தேவ், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை கிடைக்காமலோ அல்லது ஆக்சிஜன் கிடைக்காமலோ இறந்தவர்களை விட அலோபதி மருந்துகளால் தான் அதிகம் பேர் இறந்ததாக இணையதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

மேலும் அதில் அலோபதி மருத்துவ முறை முட்டாள் தனமானது, காலாவதியானது என்றும் கூறியிருந்தார்.  இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய மருத்துவ கவுன்சில், பாபா ராம்தேவ் பொது மன்னிப்பு கோர வேண்டும் என கடந்த சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து வாட்ஸ்அப் செய்தியை தான் பாபா ராம்தேவ் படித்தார் என பதஞ்சலி யோக்பீத் அறக்கட்டளை விளக்கம் அளித்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த கவுன்சில், 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோராவிட்டால் 1,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறி மீண்டும்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.