பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனுக்கு ஒதுக்கப்பட்ட புதிய துறை,.. தமிழக அரசு அறிவிப்பு.! 

பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனுக்கு ஒதுக்கப்பட்ட புதிய துறை,.. தமிழக அரசு அறிவிப்பு.! 

மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்களுக்கு புதிய துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து சென்னை எழிலகத்தில் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவை மாற்றி அமைத்து அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மாநில குழுவிற்கு துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சனும், முழுநேர உறுப்பினராக பேராசிரியர் இராம. சீனிவாசனும் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மாநில கொள்கை குழு உறுப்பினர்களுக்கான முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு புதிய துறைகளை ஒதுக்கீடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் - விவசாயக் கொள்கை மற்றும் திட்டமிடுதல்

பேராசிரியர் ஆர்.இராம. சீனுவாசன் - திட்ட ஒருங்கிணைப்பு

பேராசிரியர் - எம்.விஜயபாஸ்கர் - கல்வி மற்றும் வேலை வாய்ப்பு.

பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் -விவசாய நிலம் பயன்படுத்துதல்.

மு. தீனபந்து - இ.ஆ.ப. (ஓய்வு) -  ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்டமிடுதல்

டி.ஆர்.பி.ராஜா,சட்டமன்ற உறுப்பினர் - விவசாய கொள்கை மற்றும் திட்டமிடுதல்

மல்லிகா சீனிவாசன் - தொழிற்சாலைகள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து

மருத்துவர் அமலோற்பவநாதன் - சுகாதாரம் மற்றும் சமூகல நலத்துறை

சித்த மருத்துவர் சிவராமன் - சுகாதாரம் மற்றும் சமூகல நலத்துறை

முனைவர் நர்த்தகி நடராஜ் -  சுகாதாரம் மற்றும் சமூகல நலத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக,  சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கொள்கை குழு அலுவலகத்தில் உறுப்பினர்களின் முதல் ஆலோசனை கூட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த அறிமுக ஆலோசனை கூட்டத்தில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு அதற்குப்பின் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் குறித்தும், ஒவ்வொருவருடைய கருத்து என்ன என்பது குறித்தும் கேட்டு அறிந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.