காலக்கெடு நீட்டிக்கப்பட்டது சமூக அநீதி..! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்...!

காலக்கெடு நீட்டிக்கப்பட்டது சமூக அநீதி..! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்...!

வன்னியர் இடஒதுக்கீட்டு ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது சமூக அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்த அவர் அளித்த  அறிக்கையில், "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக,  

இதையும் படிக்க;.... புதுமுகங்களுக்கு வாய்ப்பு...மூத்த தலைவர்களை இழக்கும் பாஜக! -


தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது"  எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்படும் கால தாமதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க:.. அதிமுக செயற்குழு கூட்டம்...! இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது...!! உயர் நீதிமன்றம்...!!!

மேலும்  அவர், வரும் மே 31-ம் தேதிக்குள் இடஒதுக்கீட்டு சட்டத்தைப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.