ஆளுநரை திரும்பப் பெறுமாறு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குடியரசு தலைவருக்கு கடிதம்!

ஆளுநரை திரும்பப் பெறுமாறு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குடியரசு தலைவருக்கு கடிதம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும்படி  குடியரசு தலைவருக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடிதம் எழுதி உள்ளனர்

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக மரபுகளை மதிக்காமலும் ஆளுநர் ஆர்.என் ரவி நடந்துகொள்வதாக கூறி, அவரை பதவிநீக்கம் செய்து திரும்பப் பெறுமாறு  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்  சிலர் கையெழுத்திட்டு, சென்னை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எழுதியுள்ள கடிதத்தில்,  தன்னிச்சையாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் அவருக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பது போல நினைத்துக் கொண்டு ஜனநாயக மரபுகளை மீறி செயல்படுகவதாகவும், அதன் உச்சமாக தமிழக அமைச்சவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்துள்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
 
தனிப்பட்ட நோக்கங்களை அடைய நினைக்கும் ஆளுநரின் செயல்பாடுகளையும், அரசு அனுப்பும் சட்டமுன்வடிவுகளில் முடிவெடுக்காமல் இருப்பதையும் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் குடியரசு தலைவரை வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிக்க: அமெரிக்க மகனுக்கு, மதுரையில் கலாச்சார விழா; நெகிழ வைத்த பெற்றோர்!