அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு…வெளியான அதிர்ச்சித் தகவல்!

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு…வெளியான அதிர்ச்சித் தகவல்!

சிபிசிஐடி அதிகாரிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்டதில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கலவரம்

கடந்த ஜூலை 11 ஆம் நாள் ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்து அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் பகுதியில் நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறும் அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகத்திற்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அங்கு நடந்த மோதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.   

ஆவணங்களை எடுத்துச் சென்றதாக புகார்

இந்த சம்பவத்தின் போது அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்றுவிட்டதாக பழனிச்சாமி தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை அலுவலகத்துக்கு வந்த சிபிசிஐடி  போலீசார், அங்கு  ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். ஆய்வுக்குப் பிறகு அதிமுக அலுவலகத்தில் இருந்த வெள்ளி வேல் திருடுபோகவில்லை என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மோதல் தொடர்பாக விரைவில் விசாரணையை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.