என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி போராட்டம்

என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி போராட்டம்

நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நெய்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுரங்க விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்த முயற்சித்து வரும் நிலையில். என்எல்சி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டப்பட்டது. 

ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 1 கோடி

என்.எல்.சி நிர்வாகம் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாயும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை  வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்பு மணி  வலியுறுத்தினார்.மேலும்   என்எல்சி நிர்வாக பொறியாளர் நியமனத்தில் ஒருவர் கூட தமிழர்  இடம் பெறாதது கண்டனத்திற்குரியது என்றார்.

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நெய்வேலி ஆர்ச் கேட்டு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் இயங்கி வரும் என்எல்சி நிர்வாகம் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரம் தயாரித்து வருகிறது. தனது சுரங்க விரிவாக்கத்திற்காக அருகாமையில் இருக்கக்கூடிய கிராமங்களான தென்கூத்து , வானதி ராயபுரம் ஆகிய கிராமங்களும் அதுபோன்று 2 சுரங்க விரிவாக்கத்திற்காக மேல் வலைமாதேவி ,கீழ் வலைமாதேவி மும்முடிசோழன், அகராளம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்த முயற்சித்து வரும் நிலையில்.

நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தரவில்லை

விவசாயிகள் என்எல்சி நிர்வாகம் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும் முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு கூட இன்று வரை உரிய இழப்பீடும் வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்றும் ஆனால் என்எல்சி நிர்வாகம் தற்பொழுது மீண்டும் எங்களது விவசாய நிலங்களை கையகப்படுத்த வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாயும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே எங்கள் விவசாய நிலங்களை நிர்வாகத்திற்கு தருவோம் என்று கூறி அவப்பொழுது கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது அன்புமணி ராமதாஸ் நெய்வேலி என்.எல். சி நிறுவனத்திற்கு பூட்டு போடும் வகையில் அடையாளமாக பெரிய பூட்டு ஒன்றை எடுத்து வந்தார்.

அன்புமணி தற்போது அடையாள பூட்டை எடுத்து வந்துள்ளதாகவும் தொடர்ந்து என்எல்சி நிர்வாகம் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் உண்மையான பூட்டை எடுத்து வந்து என்எல்சி நிர்வாகத்தை இழுத்து மூடி போட்டு போடுவோம்  என்று எச்சரித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் என்எல்சி நிர்வாகம் தொடர்ந்து விவசாயிகளை பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும்.

ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு காரணம் என்எல்சி நிர்வாகம் என்றும். தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய இரு அமைச்சர்கள் நிர்வாகத்திடம் கமிஷன் வாங்கிக்கொண்டு வாய் மூடி கிடப்பதாக குற்றச்சாட்டினார்.

கிராம மக்களை வெளியேற்ற முயற்சி

என்.எல்.சி நிர்வாகம் தனது சுரங்கத்திலிருக்கும்  நீரை கிராமத்தில் வெளியேற்றி மறைமுகமாக மக்களை கிராமத்திலிருந்து வெளியேற்றும்  முயற்சித்து வருவதாகவும் கடலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சில எட்டப்பர்கள் என்எல்சி நிர்வாகத்துடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்த அன்புமணி. சமீபத்தில் என்எல்சி நிர்வாக பொறியாளர் நியமத்தில் 299 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் அதில் ஒருவர் கூட தமிழக இடம் பெறாதது பெருத்த கண்டனத்திற்குரியது என்றும்

தனது போக்கை என்.எல்.சி நிர்வாகம் இத்துடன் நிறுத்திக் கொண்டு உரிய இழப்பீடும் வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்று சொன்னாள் என்எல்சி நிர்வாகத்தை இழுத்து மூட பாமக தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். என்எல்சி நிர்வாகம் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார்.