இது நடந்தால் மட்டுமே அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்.! -அமைச்சர் அதிரடிப் பேச்சு.! 

இது நடந்தால் மட்டுமே அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்.! -அமைச்சர் அதிரடிப் பேச்சு.! 

கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற நிலை வரும்போதுதான் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் ஊதிய உயர்வு கேட்டு கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் அவர்களுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும்  சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்கள். 

இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை என்பது படிப்படியாக குறைந்து வருவதாகவும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,895 என்ற அளவு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதாகவும், இதுவரை இந்தியாவில் மூன்றாம் அலை என்பது இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் தற்போது மூடப்பட்டு உள்ள சூழ்நிலையில் அவற்றை மீண்டும் திறக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தொற்று எண்ணிக்கை எப்பொழுது பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வருகிறதோ அப்பொழுது அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடங்கப்படும் என கூறினார்.