லாரி உரிமையாளர்கள் போராட்டம்... ஆவின் பால் விநியோகம் தடை!

லாரி உரிமையாளர்கள் போராட்டம்... ஆவின் பால் விநியோகம் தடை!

தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் ஆவின் நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களாக வாடகை பணம் தராததால் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆவின் நிலையம் ஒன்று உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்து, கவரில் அடைத்து ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக அந்தந்த பகுதிகளில் லாரிகள் சென்று கேனில் பால் கொண்டு வரப்படுகிறது. இதற்காக ஆவின் நிர்வாகம் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு அமர்த்தி உள்ளது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக லாரி உரிமையாளர்களுக்கு வாடகை பணம் தராததால் வங்கி கடன் செலுத்த முடியவில்லை, பால்பாக்கெட் சேதம் அடைந்தால் அதற்கு நாங்கள்தான் பொறுப்பு என கூறி எங்களிடம் ஆவின் நிர்வாகம் தண்டம் வசூலிக்கிறது என குற்றம்சாட்டி, லாரி உரிமையாளர்கள் லாரிகளை இயக்காமல் பால் எடுக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் பால் விநியோகம் தடைப்பட்டுள்ளது.