IFS நிதி நிறுவனத்தால் ஏமாந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

IFS நிதி நிறுவனத்தால் ஏமாந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பணத்தை மீட்டு ஏமாந்தவர்களுக்கு திருப்பி தாருங்கள் கடிதத்தில் உருக்கம்:

 காந்தி நகர் கல்லூரி பகுதியைச் சேர்ந்த 28 வயது பிரசாத். ஐ.எப். எஸ்.தனியார் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியதால் அதனை நம்பி சுமார் 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.. தன்னுடைய சொந்த பணம் 15 லட்சம் மற்றும் மற்றவர்களிடம் 13   லட்ஷமென  ஐ. எப்.எஸ். நிறுவனத்தின் எஜன்ட்டாக செயல்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய கரும்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம்   கொடுத்துள்ளார்.

Another person who acted as a key broker in the IFS financial institution  scam was arrested | ஐ எப் எஸ் நிதி நிறுவன மோசடியில் முக்கிய தரகராக  செயல்பட்ட மேலும் ஒருவர் கைது

கோவில் நிலம்: பட்டா பெயர் மாற்றம் சாத்தியமில்லை - நீதிமன்றம்


சில நாட்களுக்கு முன் வெங்கடேசனை காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்ததை தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போதிலிருந்தே மிகவும் சோகத்துடன் காணப்பட்ட அவர் இனிமேல் தன் பணம் திரும்ப வரவே வராது என மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மேலும் இவர் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி அக்கம் பக்கத்தில் இடம் பணம் வாங்கியும் உறவினரிடம் பணம் ஆகியும் அதில்  28 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற அச்சத்தின் காரணமாக   இன்று விடியற்காலை தனது மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் வம்சி கிருஷ்ணா என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
 

மேலும் படிக்க | அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய இளைஞர்...கூட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு

அவரது உடலை கைப்பற்றிய குடியாத்தம் நகர காவல் துறையினர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த நிலையில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து முதன் முதலில் ஏமாற்றப்பட்டதை அறிந்து தற்கொலை செய்து கொண்ட காட்பாடி வினோத்  அவரை அடுத்து தற்போது பிரசாத் என மேலும் தற்கொலைகள் நீளாதவாறு தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசும் உடனடியாக தலைமறைவாக உள்ள ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தினரை மக்களிடம்  ஏமாற்றிய பணத்துடன் கைது செய்து மக்கள் முன்னும் நீதிமன்றத்தின் முன்னும் நிறுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.