கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பாஜகவில் இருந்து நீக்கம் ...

பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் தொடர்பாக பெரும் புயலைக் கிளப்பிய வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் என்பவருடைய யூடியூப் சேனல் முடக்கப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும் நீக்கப்படுவதாக கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.  

கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பாஜகவில் இருந்து நீக்கம் ...

பாஜக தமிழக பொதுச் செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன், பெண் நிர்வாகி ஒருவருடன் செல்போனில் ஆபாச வீடியோ செக்ஸ் சாட் பேசியதாக ஒரு வீடியோ இந்த யூடியூப் தளத்தில்தான் வெளியிடப்பட்டிருந்தது.பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசிக்கொண்டு சுய இன்பம் செய்வது போல் அந்த வீடியோ காட்சிகள் அமைந்திருந்தன. இந்த செயல்களில் ஈடுபடுவது கே.டி.ராகவன் என்று மதன் ரவிச்சந்திரன் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

 இந்த வீடியோ போலியானது என்றும், இதை சட்டப்படி சந்திப்பேன் என்றும் ராகவன் தெரிவித்த நிலையில் தனது பொதுச் செயலாளர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்த நிலையில்தான் மதன் டைரி, என்ற பெயர் கொண்ட அந்த யூட்யூப் சேனல் இன்று காலை திடீரென முடக்கப்பட்டு இருக்கிறது. சேனல் முடக்கத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியில் இருந்து யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா உள்ளிட்ட இருவரையும் நீக்கப்படுவதாக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.