பொறியியல் கலந்தாய்விற்கு ஜூன் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி

பொறியியல் கலந்தாய்விற்கு வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

பொறியியல் கலந்தாய்விற்கு ஜூன் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி,  நீட் தேர்வு முடிவிற்கு பிறகே பொறியியல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்றார். இதனைத்தொடர்ந்து  ஜூன் 20ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், ஜூலை 19ஆம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் எனவும் தெரிவித்தார்.

அதன்பின் ஜூலை 20 முதல் 31ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும் என கூறிய பொன்முடி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆகஸ்ட் 16 முதல் 18 வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களுக்கும், ஆகஸ்ட் 17 மற்றும் 18ஆம் தேதி பட்டியலின பிரிவிற்கும்,  ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை பொது கலந்தாய்வும் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி  கூறினார்.