ஏற்காட்டில் சாலை சீரமைப்பு பணிகள்......! ஆட்சியர் அளித்த தகவல்.

ஏற்காட்டில் சாலை சீரமைப்பு பணிகள்......!  ஆட்சியர் அளித்த  தகவல்.

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான மலை பாதையில் கடந்த பருவமழையின் போது மண் சரிவு ஏற்பட்டதால் இரண்டு மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் எதிர்வரும் பருவமழையின் போது அதே பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நிரந்தர தீர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.  அதன்படி கடந்த 24ஆம் தேதி முதல் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஏற்காடு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையான குப்பனூர் மலை பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இதனிடையே குப்பனூர் மலைப்பாதையில் கடந்த மூன்று நாட்களாக அடுத்தடுத்து சுற்றுலா வந்த வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு சாலையை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்காக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் சாலை சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.

அப்போது, சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து இலகு ரக வாகனங்கள் தற்போது சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் இந்த சாலையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரும் சனிக்கிழமை முதல் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகளின் இலகு ரக வாகனங்கள் அடிவாரம் மலை பாதையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது .  மேலும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வாகனங்கள் ஒருவழி பாதையாக அனுமதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க     }  கர்நாடக பாஜக பிரதமர் கட்டுப்பாட்டில் இல்லையா ? முரசொலி விமர்சனம்!!!

மேலும் மலைப்பாதையில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதற்கு காரணம் முன் அனுபவம் ஏதும் இல்லாத ஓட்டுநர்கள் மலைப்பாதையில் வாகனங்களை இயக்குவதாலேயே விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க     }  டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் தடை - வழக்கு - நீதிமன்றம் தள்ளுபடி