நூல் விலை உயர்வு.. 6 நாள் வேலைநிறுத்தம்... ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்க வாய்ப்பு!!

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16-ம் தேதி முதல் 21-வரை வேலை நிறுத்தம் என திருவள்ளூர், காஞ்சி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டைமாவட்ட லுங்கி மொத்த உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நூல் விலை உயர்வு.. 6 நாள் வேலைநிறுத்தம்... ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்க வாய்ப்பு!!

திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  லுங்கி மொத்த உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது.

இதில், உயர்ந்து வரும் நூல் விலை உயர்வை மத்திய,மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும், விலை உயர்வைக் கண்டித்து வரும் 16- தேதி முதல்  21-ம் தேதி வரை நான்கு மாவட்டங்களிலும் பொது வேலை நிறுத்தம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கைத்தறித்துறை  அமைச்சர் காந்தியை சந்தித்து மனுக் கொடுக்க உள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், 6 நாள் வேலைநிறுத்தத்தால் 100 கோடி ரூபாய்  அளவில் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் லுங்கி மொத்த உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.