புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை...மழையால் முறிந்து விழுந்த ராட்சத மரம்...!

புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை...மழையால் முறிந்து விழுந்த ராட்சத மரம்...!

சென்னை அடையாறில் சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

அடையார் காந்திநகர் கிளப்பிற்கு எதிரில்  பழமையான மரம் ஒன்று ஆபத்தான நிலையில், கீழே விழும் சூழலில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார்  கடிதம் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

இதையும் படிக்க : தொடர் மழையால் சிக்கி தவிக்கும் வாகனங்கள்...தண்ணீரை உடனுக்குடன் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை!

இந்நிலையில் நேற்று இரவு முதல் திடீரென பெய்த கனமழையால் அடையார் சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் செல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள் கீழே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதனிடையே மரம் சாய்ந்தது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், முன் கூட்டியே மரத்தை அகற்றி இருந்தால் இந்த சேதத்தை தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.